என் மனம் என்பது ஒரு மலரைப் போல.அதில் இருந்து வரும் சிந்தனைகள் நல்ல நறுமண வாசனைப் போல.அதனால்தான் அது மனவாசம்.
பிரபலமான இடுகைகள்
-
வகுப்பறை: கண்ணதாசன்: பூஜைக்கு வந்த மலரே வா! பூமிக்கு வந்த நிலவே வா!
-
ஆகமக்கடல் (இது ஒரு ஆன்மீக தேடல்): ஜோதிடம் ஓர் அலசல்
-
வகுப்பறை: கண்ணதாசனின் இறையுணர்வு
-
ஆகமக்கடல் (இது ஒரு ஆன்மீக தேடல்): *தமிழ் மாதப் பெயர்கள் எப்படி வந்தன *
-
வகுப்பறை: எமனின் பயோடேட்டா!
-
குடி வெளங்ங்ங்ங்ங்கீறும்!!!! | கசியும் மௌனம்
-
ஆகமக்கடல் (இது ஒரு ஆன்மீக தேடல்): ஜோதிடம் ஓர் அலசல்
-
ரசிகன்..: "சூரியக்" குடும்பம்.
-
தீராத பக்கங்கள்: இந்திய வரலாற்றில் இன்று முக்கிய தினம்!
-
தயவு செய்து படித்து விட்டு உங்கள் கருத்தை எழுதுங்கள். தீட்ட தீட்டதான் கரியும் வைரமாகும்.நன்றி.
செவ்வாய், 27 ஜூலை, 2010
வெள்ளி, 9 ஜூலை, 2010
புதன், 7 ஜூலை, 2010
சனி, 3 ஜூலை, 2010
வியாழன், 1 ஜூலை, 2010
வெள்ளி, 18 ஜூன், 2010
வியாழன், 17 ஜூன், 2010
வெள்ளி, 4 ஜூன், 2010
திங்கள், 24 மே, 2010
சனி, 17 ஏப்ரல், 2010
வெள்ளி, 16 ஏப்ரல், 2010
சனி, 10 ஏப்ரல், 2010
வியாழன், 8 ஏப்ரல், 2010
வெள்ளி, 2 ஏப்ரல், 2010
sirippo sirippu
இன்று கொஞ்சம் வித்தியாசமான சிந்தனை.நேற்று இரவு நான் படுத்துக் கொண்டு விட்டத்தை பார்த்து சிந்தனை செய்ததில் எனக்கு தோன்றிய மகா மகா விடை காண முடியாத கேள்விகள்.உங்களுக்கு தெரிந்தால் எனக்கு தெரிவியுங்கள்.உங்களுக்காக நான் நோபல் பரிசை சிபாரிசு செய்கிறேன்.சரி அந்த சிந்தனைகள் என்னெவென்று பார்ப்போமா?
௧. தண்ணி பாம்புக்கு சளி பிடிக்குமா?
௨.கருப்பாக இருக்கிற எருமை மாடு எப்படி வெள்ளையாக பால் கொடுக்குது?
௩.சரக்கு ரயில் தள்ளாடுமா?
௪. பிராந்திய ஹாட் ட்ரின்க்னு சொல்றாங்களே,அதை அப்படியே குடிப்பாங்கள இல்ல ஆத்தி குடிப்பாங்கள?
௫.குண்டூசி ஒல்லியாதானே இருக்கு?அப்புறம் ஏன் குண்டூசினு பேர்
வைச்சாங்க?
௬.கொசு கொட்டாவி விடுமா?
௭. எறும்பு yeappam விடுமா?
இது போன்று எண்ணற்ற கேள்விகள் என்னுள்ளே தினம் தினம்
எழுகின்றன.இப்போதைக்கு இது போதும்.இதற்கான பதில்களை
எனக்கு எழுதுங்கள். அதற்க்கான பரிசினை தட்டிச் செல்லுங்கள்.
முதல் பரிசு,haanngkong சுற்று பயணம்.
இரண்டாம் பரிசு,இந்திய சுற்றுப் பயணம்.
மூன்றாம் பரிசு,தமிழ் நாடு சுற்று பயணம்.
.......................10 பேருக்கு ஆறுதல் பரிசாக பழைய சாம்பார்,சட்னி இலவசம்.
முந்துங்கள்.
சனி, 27 மார்ச், 2010
வெள்ளி, 26 மார்ச், 2010
ஆசைகள்.
எல்லோரும் நலம்தானே?
இன்று நாட்டிலே நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பார்த்தால் ,
பாரதி சொன்ன ,''ரௌத்ரம் பழகு'' என்பதுதான் நினைவுக்கு வருகிறது.
இருந்தாலும் சாதாரண மனிதனாக இருந்து பார்க்கும்போது நமக்கும் ஆசை
கொஞ்சம் துளிர் விடுகிறது. எப்படி?
நாமும் சாமியார் ஆக வேண்டும்.நமது பெயரை மாற்றி வேறு பெயர் ஒன்றை-- ஸ்ரீ,என்றும் ஆநந்தாஆ என்றும் மாற்ற வேண்டும்.
காவிஉடுத்தவேண்டும்.
பணத்த்லே புரள வேண்டும்.நிறைய சிஷ்யகோடிகளை உடன் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக பெண் சிஷ்யைகள் நிறைய வேண்டும்.
அவர்களோடு உல்லாசமாக இருக்கவேண்டும்.ஆடம்பரமாக இருக்கவேண்டும்.
புத்தகங்களில் கதை,கட்டுரை,தத்துவங்கள் எல்லாம் எழுதவேண்டும்.
பின் பக்தர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அழகாக அருமையாக பதில் சொல்ல வேண்டும்.சில பல மாயா மந்த்ரங்களை தெரிந்து கொண்டு அனைவரையும் ஏமாற்ற தெரிய வேண்டும்.பின்பு போலீசில் மாட்டி களி தின்ன வேண்டும்.
அடுத்தது;
இதுவும் ஒரு ஆசை.
எனது தொகுதியில் இடைத் தேர்தல் வரவேண்டும்.
அனைத்துக் கட்சிகளும் செலவுக்கு பணம் தர வேண்டும்.
தினமும் பிரியாணி சிக்கனுடன் வேண்டும்.
தினம்தோறும் மூன்றுவேளை க்வார்ட்டர் வேண்டும்.
ஆனால் இதுவெல்லாம் நடக்க எங்கள் தொகுதி எம்.எல்.எ .சாக வேண்டும்.
ஒரு இடைத் தேர்தல் வர வேண்டும்.இதுவெல்லாம் நடக்குமா?
ஆண்டவன் கருணை மழை பொழிய வேண்டும்.
இதுதான் இந்த வறியவனின் ஆசை.
என் ஆசை நிறைவேற நீங்களும் என்னுடன் சேர்ந்து பிரார்த்தனை
செய்யுங்கள்.எனக்கு பலன் கிடைத்தால் உங்களுக்கும்
பங்கு கொடுப்பேன்..
வியாழன், 11 மார்ச், 2010
நம்பாதே!
எல்லோருக்கும் வணக்கமுங்கோ!
இதனால் நான் எல்லோருக்கும் சொல்ல வருவதென்னவென்றால்,இங்கே நமது ஊரில் இருக்கும் சாமியார்களை எல்லாம் நம்பாதீர்கள்.இவர்கள் எல்லாம் யார் தெரியுமா?
அடுத்தவர் பிழைப்பை கெடுத்து,அடுத்தவர் குடும்பத்தை கெடுத்து அவர்கள் அனைவரையும் தன காலடியில் விழவைத்து அவர்களை அடிமைகளாக்கி வாழத் தெரிந்த மோ(டி)சடி வித்தைகாரர்கள் இவர்கள்.
சாய்பாபா,கல்கி,நித்தியானந்தா,ஜ்ஹுகி வாசுதேவ்,சுவாமி சுகபோதானந்தா,அம்மா பங்காரு அடிகளார்,அமிதானந்தமாயே ,அப்புறம் இது போக இன்னும் பலப்பல பலான ஸ்வாமிகள் நமது நாட்டிலே வீற்றிருக்கிறார்கள்.இவர்கள் அனைவரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சற்று உற்று பாருங்கள்.
நான்தான் கடவுள் என்று சொல்லிக் கொள்வார்கள். பின்பு கொல்வார்கள்.இவர்கள் பின்னால் ஒரு கூட்டம் இந்த சாமியார்களுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டு இருப்பார்கள். கண்களை மூடிக் கொண்டு பல தவறுகள் செய்வார்கள்.தங்களை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு,மேலே இருக்கும் சாமியார்களைப் பாருங்கள்.எல்லோருமே தான்தான் கடவுள் என்று சொல்லித் திரிபவர்கள்.இவர்களை ஆராதிக்க ஒரு கூட்டம். பல பைத்திய பணக்காரக் கூட்டங்கள் தாங்கள் பாவம் செய்து சேர்த்த செல்வங்களை கொண்டு போய் அவர்களின் காலடியில் கொண்டு பொய் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறார்கள். இந்த சாமியார்கள் கொஞ்சம் கூட தங்களின் உடல் உழைப்பே இல்லாமல் எந்த விதமான மூலதனமும் இல்லாமல் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் ஆகிவிடுகிறார்கள்.பின் அந்த சாமியார்களுக்குள்ளே ஏதாவது ஒரு பிரச்சினை வெடிக்கும் போது அவர்களின் வண்டவாளங்கள் அனைத்தும் தண்டவாளத்தில் .போகப் போக பாருங்கள்,என்ன ஆகும் என்று.
பார்த்தீர்களா ,இவர்களை எல்லாம் சொன்னேன்.ஒருவரை மறந்து விட்டேனே.யார் அவர்?
இன்னும் கீழே போங்கள்.
இன்னும் கீழே.
ஹா,ஹா,ஹா.அவர்தான் சேலம் குட்டி சாமியார்.
இவர் என்ன ஆனார் என்று கொஞ்சம் சொல்லுங்களேன்.
படித்து விட்டு உங்கள் எண்ணங்களை பதிவாக்குங்கள்.
நன்றி.
வெள்ளி, 5 மார்ச், 2010
எல்லோருக்கும் வணக்கமுங்கோ!
இத்தனை நாள் இவன் எங்கே போய்விட்டான் என்று தேடினீர்கள? என்ன செய்வது?நாட்டு நடப்பு எல்லாம் அப்படி இருக்கின்றது.
நம் நாட்டில் மட்டும்தான் இந்த மாதிரி சாமியார்கள் தொல்லை அதிகம்.டெல்லி இல் பார்த்தால் அங்கே ஒரு சாமியார் தன்னை ,ஒரு இச்சாதாரி என்று சொல்லிக் கொண்டு மாமா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் எம்.எல்.எ ,-எம்.பீ,மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் துணையோடு காமக் கழியாட்டம் ஆடி இருக்கிறான்.இப்பொழுது அவன் சிறையில்.
தமிழகத்திற்க்கு வருவோம்.இங்கே நடக்கும் கூத்தை பார்த்தால் ஒரே வெட்கமாக இருக்கிறது.சாமியாரின் போர்வைக்குள் ஒரு நடிகை.இன்னும் எத்தனை நடிகையோ?
கதவை திறந்தால் காற்று வரவில்லை.நடிகைதான் வருகிறாள் .ஜன்னலை திறந்தால் காமிராதான் வருகிறது. இந்த ஊடகங்களுக்கும் வெட்கமில்லை.பத்திரிகை உலகம் அவரை பிரபல படுத்துகிறது.டிவி உலகம் கேவலபடுத்துகிறது.என்னமோ நடக்குது.மர்மமாய் இருக்குது.போதாதட்கு பத்தாவது அவதாரமாக கல்கி பகவான் என்றொரு சாமியார்.அவரும் பலப்பல பலான லீலைகள் செய்து கொண்டிருக்கிறார் என்று நிறையா செய்திகள் வருகின்றது.இந்த அரசும் காவல்துறையும் என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை.முதல்வருக்கு பாராட்டு விழாவே கதி! காவலுக்கு லஞ்சமே கதி. மக்களுக்கு மறதியே கதி.ஆகமொத்தம் இந்த நாடும் ,நாட்டுமக்களும் நாசமாக போவது உறுதி.
நமது மக்கள் மிகமிக அறிவாளிகள்.ஒரு மனிதன் தான் கட்டி இருக்கும் கோவணத்தை இழந்தால் கல்லால் எறிவார்கள்.அதே மனிதன் கொள்கையை இழந்தால் அமைச்சர் ஆக்குவார்கள்.அதே மனிதன் காவி உடுத்தினால் சாமியார் ஆக்கிவிடுவார்கள்.
இதை நான் சொல்லவில்லை.கவியரசர் கண்ணதாசன் சொன்னது.நன்றி.
வெள்ளி, 26 பிப்ரவரி, 2010
செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
விசாரணை
என்ன படித்தீர்களா?என்னை பற்றி என்ன நினைக்க தோன்றுகிறது ?
இவன் பெரிய எழுத்தாளன் ஆகி விடுவான் என்ற பயமா?
பயப் படாதீர்கள்.உங்களை இறைவன் காப்பாற்றுவான்.
யார் யாரோ எழுதுகிறார்கள்.அப்பொழுதெல்லாம் ஒன்றுமே நடக்கவில்லை,நான் எழுதினால் மட்டும் உலகம் அழிந்து விடுமா என்ன?
கவிஞர் கனிமொழியே கவிதை எழுதும் போது நான் எழுதினால் மட்டும் என்ன குறைந்தா போய் விடும்!பயப் படாதீர்கள்.ஆண்டவன் உங்களை காப்பாற்றுவாராக!எதையும் தாங்கும் இதயம் இருந்தால்.
திங்கள், 22 பிப்ரவரி, 2010
நானே ராஜா -நானே மந்திரி
இந்த லோகத்திற்கு நானே ராஜா,நானே மந்திரி.
இதுதான் எனது வலை உலக முதல் பதிவு.நன்றாக இருந்தாலும் சரி ,நன்றாக இல்லாவிட்டாலும் சரி,நீங்கள் அதை சகித்துக் கொண்டுதான் ஆகவேண்டும்.
சந்த்ரலோகம் என்றால் என்ன?
- சந்திரன் என்றால் நான்.நான் இருப்பது இந்த உலகத்தில்.
- அதில் எனக்கு என்று ஒரு தனி உலகம்.அதுதான் சந்த்ரலோகம்.
- இந்திரலோகம் என்றால் அங்கே இந்திரன் முதலான தேவர்கள் இருப்பார்.
- இங்கே சந்த்ரலோகத்தில் சந்திரன் நான் இருக்கின்றேன்.
- என்னடா இவன் இந்த மொக்கை போடுகிறான் என்று உணர்ச்சிவசபடாதீர்கள்.இதை எல்லாம் படிக்க வேண்டும் என்பது உங்கள் தலைஎழுத்து.
- என்னுடைய எழுத்துக்களையும் படிக்க வேண்டும் என்றால் ஒரு தனி அம்சம் வேண்டும்.அது உங்களுக்கு இருக்கிறது.அதனால்தான் இந்த இடுகை உங்களை தேடி வருகிறது,தவறாமல் படித்து உங்கள் கருத்துக்களை எதிரொலியாக தெரிவியுங்கள்.
நானே ராஜா.,நானே மந்திரி
-
எனக்கு என்று ஒரு உலகம் .
அதில் நானே ராஜா .,நானே மந்திரி .இங்கே சட்டங்கள் போடுவதும் நான்தான் .
அதை மீறுவதும் நான்தான்.என்னை கேள்வி கேட்க யாருக்கும் இங்கே உரிமை இல்லை . -
இதுதான் எனது முதல் பதிவு .சரியோ இல்லை தவறோ இதை நீங்கள் சகித்து கொண்டுதான் ஆகவேண்டும் .ஆம் உங்களுடைய தலைஎழுத்து அதுதான் என்றால் விட்டா போகும்.
வலைப்பதிவு காப்பகம்
-
▼
2010
(27)
-
▼
ஜூலை
(7)
- குடி வெளங்ங்ங்ங்ங்கீறும்!!!! | கசியும் மௌனம்
- வகுப்பறை: எமனின் பயோடேட்டா!
- தீராத பக்கங்கள்: இந்திய வரலாற்றில் இன்று முக்கிய த...
- ரசிகன்..: "சூரியக்" குடும்பம்.
- ஆகமக்கடல் (இது ஒரு ஆன்மீக தேடல்): *தமிழ் மாதப் பெய...
- ஆகமக்கடல் (இது ஒரு ஆன்மீக தேடல்): ஜோதிடம் ஓர் அலசல்
- ஆகமக்கடல் (இது ஒரு ஆன்மீக தேடல்): ஜோதிடம் ஓர் அலசல்
-
▼
ஜூலை
(7)