பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 5 மார்ச், 2010

எல்லோருக்கும் வணக்கமுங்கோ!

இத்தனை நாள் இவன் எங்கே போய்விட்டான் என்று தேடினீர்கள? என்ன செய்வது?நாட்டு நடப்பு எல்லாம் அப்படி இருக்கின்றது.

நம் நாட்டில் மட்டும்தான் இந்த மாதிரி சாமியார்கள் தொல்லை அதிகம்.டெல்லி இல் பார்த்தால் அங்கே ஒரு சாமியார் தன்னை ,ஒரு இச்சாதாரி என்று சொல்லிக் கொண்டு மாமா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் எம்.எல்.எ ,-எம்.பீ,மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் துணையோடு காமக் கழியாட்டம் ஆடி இருக்கிறான்.இப்பொழுது அவன் சிறையில்.

தமிழகத்திற்க்கு வருவோம்.இங்கே நடக்கும் கூத்தை பார்த்தால் ஒரே வெட்கமாக இருக்கிறது.சாமியாரின் போர்வைக்குள் ஒரு நடிகை.இன்னும் எத்தனை நடிகையோ?

கதவை திறந்தால் காற்று வரவில்லை.நடிகைதான் வருகிறாள் .ஜன்னலை திறந்தால் காமிராதான் வருகிறது. இந்த ஊடகங்களுக்கும் வெட்கமில்லை.பத்திரிகை உலகம் அவரை பிரபல படுத்துகிறது.டிவி உலகம் கேவலபடுத்துகிறது.என்னமோ நடக்குது.மர்மமாய் இருக்குது.போதாதட்கு பத்தாவது அவதாரமாக கல்கி பகவான் என்றொரு சாமியார்.அவரும் பலப்பல பலான லீலைகள் செய்து கொண்டிருக்கிறார் என்று நிறையா செய்திகள் வருகின்றது.இந்த அரசும் காவல்துறையும் என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை.முதல்வருக்கு பாராட்டு விழாவே கதி! காவலுக்கு லஞ்சமே கதி. மக்களுக்கு மறதியே கதி.ஆகமொத்தம் இந்த நாடும் ,நாட்டுமக்களும் நாசமாக போவது உறுதி.

நமது மக்கள் மிகமிக அறிவாளிகள்.ஒரு மனிதன் தான் கட்டி இருக்கும் கோவணத்தை இழந்தால் கல்லால் எறிவார்கள்.அதே மனிதன் கொள்கையை இழந்தால் அமைச்சர் ஆக்குவார்கள்.அதே மனிதன் காவி உடுத்தினால் சாமியார் ஆக்கிவிடுவார்கள்.

இதை நான் சொல்லவில்லை.கவியரசர் கண்ணதாசன் சொன்னது.நன்றி.

1 கருத்து:

  1. சில விஷயங்களின் நிஜமான காற்று வந்தது சார்

    எங்களைப்போன்ற இளைஞர்களுக்கு தேவையான பதிவு...

    பதிலளிநீக்கு