பிரபலமான இடுகைகள்

வியாழன், 11 மார்ச், 2010

நம்பாதே!

எல்லோருக்கும் வணக்கமுங்கோ!

இதனால் நான் எல்லோருக்கும் சொல்ல வருவதென்னவென்றால்,இங்கே நமது ஊரில் இருக்கும் சாமியார்களை எல்லாம் நம்பாதீர்கள்.இவர்கள் எல்லாம் யார் தெரியுமா?

அடுத்தவர் பிழைப்பை கெடுத்து,அடுத்தவர் குடும்பத்தை கெடுத்து அவர்கள் அனைவரையும் தன காலடியில் விழவைத்து அவர்களை அடிமைகளாக்கி வாழத் தெரிந்த மோ(டி)சடி வித்தைகாரர்கள் இவர்கள்.

சாய்பாபா,கல்கி,நித்தியானந்தா,ஜ்ஹுகி வாசுதேவ்,சுவாமி சுகபோதானந்தா,அம்மா பங்காரு அடிகளார்,அமிதானந்தமாயே ,அப்புறம் இது போக இன்னும் பலப்பல பலான ஸ்வாமிகள் நமது நாட்டிலே வீற்றிருக்கிறார்கள்.இவர்கள் அனைவரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சற்று உற்று பாருங்கள்.

நான்தான் கடவுள் என்று சொல்லிக் கொள்வார்கள். பின்பு கொல்வார்கள்.இவர்கள் பின்னால் ஒரு கூட்டம் இந்த சாமியார்களுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டு இருப்பார்கள். கண்களை மூடிக் கொண்டு பல தவறுகள் செய்வார்கள்.தங்களை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு,மேலே இருக்கும் சாமியார்களைப் பாருங்கள்.எல்லோருமே தான்தான் கடவுள் என்று சொல்லித் திரிபவர்கள்.இவர்களை ஆராதிக்க ஒரு கூட்டம். பல பைத்திய பணக்காரக் கூட்டங்கள் தாங்கள் பாவம் செய்து சேர்த்த செல்வங்களை கொண்டு போய் அவர்களின் காலடியில் கொண்டு பொய் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறார்கள். இந்த சாமியார்கள் கொஞ்சம் கூட தங்களின் உடல் உழைப்பே இல்லாமல் எந்த விதமான மூலதனமும் இல்லாமல் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் ஆகிவிடுகிறார்கள்.பின் அந்த சாமியார்களுக்குள்ளே ஏதாவது ஒரு பிரச்சினை வெடிக்கும் போது அவர்களின் வண்டவாளங்கள் அனைத்தும் தண்டவாளத்தில் .போகப் போக பாருங்கள்,என்ன ஆகும் என்று.

பார்த்தீர்களா ,இவர்களை எல்லாம் சொன்னேன்.ஒருவரை மறந்து விட்டேனே.யார் அவர்?

இன்னும் கீழே போங்கள்.

இன்னும் கீழே.

ஹா,ஹா,ஹா.அவர்தான் சேலம் குட்டி சாமியார்.

இவர் என்ன ஆனார் என்று கொஞ்சம் சொல்லுங்களேன்.

படித்து விட்டு உங்கள் எண்ணங்களை பதிவாக்குங்கள்.

நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக