வணக்கம்.எல்லோருக்கும் வணக்கம்.
எல்லோரும் நலம்தானே?
இன்று நாட்டிலே நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பார்த்தால் ,
பாரதி சொன்ன ,''ரௌத்ரம் பழகு'' என்பதுதான் நினைவுக்கு வருகிறது.
இருந்தாலும் சாதாரண மனிதனாக இருந்து பார்க்கும்போது நமக்கும் ஆசை
கொஞ்சம் துளிர் விடுகிறது. எப்படி?
நாமும் சாமியார் ஆக வேண்டும்.நமது பெயரை மாற்றி வேறு பெயர் ஒன்றை-- ஸ்ரீ,என்றும் ஆநந்தாஆ என்றும் மாற்ற வேண்டும்.
காவிஉடுத்தவேண்டும்.
பணத்த்லே புரள வேண்டும்.நிறைய சிஷ்யகோடிகளை உடன் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக பெண் சிஷ்யைகள் நிறைய வேண்டும்.
அவர்களோடு உல்லாசமாக இருக்கவேண்டும்.ஆடம்பரமாக இருக்கவேண்டும்.
புத்தகங்களில் கதை,கட்டுரை,தத்துவங்கள் எல்லாம் எழுதவேண்டும்.
பின் பக்தர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அழகாக அருமையாக பதில் சொல்ல வேண்டும்.சில பல மாயா மந்த்ரங்களை தெரிந்து கொண்டு அனைவரையும் ஏமாற்ற தெரிய வேண்டும்.பின்பு போலீசில் மாட்டி களி தின்ன வேண்டும்.
அடுத்தது;
இதுவும் ஒரு ஆசை.
எனது தொகுதியில் இடைத் தேர்தல் வரவேண்டும்.
அனைத்துக் கட்சிகளும் செலவுக்கு பணம் தர வேண்டும்.
தினமும் பிரியாணி சிக்கனுடன் வேண்டும்.
தினம்தோறும் மூன்றுவேளை க்வார்ட்டர் வேண்டும்.
ஆனால் இதுவெல்லாம் நடக்க எங்கள் தொகுதி எம்.எல்.எ .சாக வேண்டும்.
ஒரு இடைத் தேர்தல் வர வேண்டும்.இதுவெல்லாம் நடக்குமா?
ஆண்டவன் கருணை மழை பொழிய வேண்டும்.
இதுதான் இந்த வறியவனின் ஆசை.
என் ஆசை நிறைவேற நீங்களும் என்னுடன் சேர்ந்து பிரார்த்தனை
செய்யுங்கள்.எனக்கு பலன் கிடைத்தால் உங்களுக்கும்
பங்கு கொடுப்பேன்..
என் மனம் என்பது ஒரு மலரைப் போல.அதில் இருந்து வரும் சிந்தனைகள் நல்ல நறுமண வாசனைப் போல.அதனால்தான் அது மனவாசம்.
பிரபலமான இடுகைகள்
-
வகுப்பறை: கண்ணதாசன்: பூஜைக்கு வந்த மலரே வா! பூமிக்கு வந்த நிலவே வா!
-
ஆகமக்கடல் (இது ஒரு ஆன்மீக தேடல்): ஜோதிடம் ஓர் அலசல்
-
ஆகமக்கடல் (இது ஒரு ஆன்மீக தேடல்): *தமிழ் மாதப் பெயர்கள் எப்படி வந்தன *
-
வகுப்பறை: கண்ணதாசனின் இறையுணர்வு
-
வகுப்பறை: எமனின் பயோடேட்டா!
-
குடி வெளங்ங்ங்ங்ங்கீறும்!!!! | கசியும் மௌனம்
-
ஆகமக்கடல் (இது ஒரு ஆன்மீக தேடல்): ஜோதிடம் ஓர் அலசல்
-
ரசிகன்..: "சூரியக்" குடும்பம்.
-
தீராத பக்கங்கள்: இந்திய வரலாற்றில் இன்று முக்கிய தினம்!
-
தயவு செய்து படித்து விட்டு உங்கள் கருத்தை எழுதுங்கள். தீட்ட தீட்டதான் கரியும் வைரமாகும்.நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக